

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 2-வது நாளாக நேற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்ததால் வங்கி ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர்.
மத்திய அரசு கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அவற்றை வங்கியில் கொடுத்து புதிய நோட்டு களை வாங்கிக் கொள்ளும்படி கூறியது. இதையடுத்து, ஏராளமானோர் நேற்றுமுன்தினம் வங்கிகளுக்குச் சென்று தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினர். முதல் நாளன்று அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் ஏராளமானோர் தங்கள் பணத்தை மாற்ற வங்கிகளுக்கு வந்தனர். இதனால் வங்கி ஊழியர் கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். இன்றைக்கும் அதே நிலைதான் பெரும்பாலும் நீடிக்கிறது. தமிழகம் மற்றும் இந்திய மக்களின் தற்போதைய நிலையைப் பேசும் படங்கள்:
ஹரியாணா, குருகிராமில் வங்கி வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
வேப்பேரியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்காக கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.
சென்னை சூளையில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் பணத்தை செலுத்துவதற்காக 2வது நாளாக நேற்றும் நிரம்பி வழிந்த வாடிக்கையாளர்கள்.
சென்னை, பாரிமுனை ரிசர்வ் வங்கியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் மக்கள்.
புரசைவாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்காக காத்திருக்கும் பொதுமக்களின் நீண்ட வரிசை.
படங்கள்: ம.பிரபு, க.ஸ்ரீபரத்