அரசு போக்குவரத்து ஊழியர் டிச.13-ல் தர்ணா போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர் டிச.13-ல் தர்ணா போராட்டம்
Updated on
1 min read

சென்னை: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் டிசம்பர் 13-ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், சம்மேளனம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பிரச்சினைகளையும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.

அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்யும் ஓட்டுநர், நடத்துநருக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். நடத்துநர் இல்லா பேருந்து சேவையை நிறுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் 2020 மே மாதம் முதல்வழங்கப்படவில்லை; அதைவழங்க வேண்டும். அதேபோல், 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை வலியுறுத்தி டிசம்பர் 13-ம் தேதி அரசு போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in