

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பரவலாகமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடக்கிய பிறகு தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் கடலூர் சிப்காட் பகுதியில் சிதம்பரம் - கடலூர் சாலையில் மழை நீர் ஆறாக ஓடுகிறது.
தொடர்மழையால் கடலூரில் குண்டு உப்பலவாடி, முதுநகர்அம்பேத்கர் நகர், வண்டிப்பாளை யம் கண்ணகி நகர், திருப்பாதிரிப் புலியூர் தானம் நகர், குப்பன் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், சிதம்பரம் அருகே வல்லம்படுகை, வேலக்குடி, கட வாச்சேரி, கண்டியமேடு, வையூர் மற்றும் குமராட்சி பகுதியில் கீழவன்னீயூர், திருநாரையூர் கிராமங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்மழையில் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் விவசாயப் பணிக ளும் பாதிக்கப்பட்டன. வீராணம் ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை வழியாக தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சிதம் பரம், காட்டுமன்னார்கோவில், குமாரட்சி பகுதி விளைநிலங்களில் சூழ்ந்துள்ள தண்ணீர் லேசாக வடிந்து வருகிறது. பழைய கொள்ளிடம், வெள்ளாறு, கெடி லம் ஆறு, தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது.
நேற்றைய மழையளவு: கடலூர் 58.3 மிமீ, குப்பநத்தம் 26.8 மிமீ, விருத்தாசலம் 26 மிமீ, லக்கூர் 18.1 மிமீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 13.4 மிமீ, வேப்பூர் 10 மிமீ, பண்ருட்டி 9 மிமீ, அண்ணாமலைநகர் 5.8 மிமீ, சிதம்பரம் 2 மிமீயும் மழை பெய்துள்ளது.