நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை: செம்பரம்பாக்கத்தில் ஆய்வு செய்த பின்பு துரைமுருகன் பேட்டி

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
Updated on
1 min read

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் 20.50 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் செம்பரம்பாக்கத்திற்கு 2,187 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,156 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இதனைத் தோடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை. 16ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in