

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கண்டு அச்சம் அடையத் தேவையில்லை. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காகத்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள் ளது. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங் களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.