நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சார்பில் 700 இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு சமரசம்

செஞ்சி நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சார்பில் இழப்பீடு வழங்க சமரசம் செய்யப்பட்ட அதிகபட்ச தொகையான  ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கான ஒப்புதல் சீட்டை தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் கே.எஸ்.ஜோதி, செஞ்சி சார்பு நீதிபதி நளினகுமாரிடம் வழங்கினார். அருகில் நீதித்துறை நடுவர் ஆர்.மனோகர், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன பிராந்திய மேலாளர் சந்திரசேகர் மற்றும் துணை மேலாளர்  கணேஷ் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சார்பில் 700 இழப்பீட்டு கோரிக்கைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன.

அரசு பொது காப்பீட்டு நிறுவனமான தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் தேசிய லோக்-அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மூலமாக சுமார் 700 இழப்பீட்டு கோரிக்கைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நீதிமன்றத்தில் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ.2.30 கோடிக்கான ஒப்புதலை நியூ இந்தியா அஷ்யூரன்ஸின் பொது மேலாளர் கே.எஸ்.ஜோதி, சார்பு நீதிபதி நளின குமாரிடம் வழங்கினார். நீதித்துறை நடுவர் ஆர்.மனோகர், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பிராந்திய மேலாளர் சந்திரசேகர், துணை மேலாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in