

விழுப்புரம்: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 2 வதுநாளாக நேற்றும் விடிய, விடிய மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் நகரில் வீடுகளை தண்ணீ ர்சூழ்ந்தது. தாமரைகுளம், விஜிபிநகர், வ.உ.சி நகர், பொன் அண்ணாமலை நகர், தந்தைபெரியார் நகர் உள்ளிட்ட பகுதி களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டு குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
நகராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத் துறையினரும் சாலையோரங்களில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றும் பள்ளி, கல்லூரிக ளுக்கு 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே ஆனாங்கூர் மற்றும் பில்லூர் ஆகிய பகுதிகளில் மழைக்கால சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். பில்லூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று முன்தினம் பெய்த கன மழையில் காரணமாக வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில்உள்ள பயன்பாடற்ற வீடும் இடிந்து விழுந்தது. சாய்ந்த ஆலமரம் தீயணைப்புத் துறையினரால் வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. இப்பணி களை ஆட்சியர் பார்வையிட்டார்.
விழுப்புரம் அருகே பில்லூர், மேட்டுப்பாளையம், ஒரத்தூர், செஞ்சி அருகே சிறுவாடி, வானூர் அருகே குயிலாப்பாளையம், மரக்காணம் அருகே ஓங்குராறு உள் ளிட்ட பகுதிகளில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப் பாலங்கள் மூழ்கின. இதனால் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று காலை 8 மணி தொடங்கி மாவட்டத்தில் பரவலாக வெயில் அடித்தது. இந்த வெயில் தொடர்ந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் சூழல் நிலவுகிறது.
மழைஅளவு: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை சராசரியாக 66.80 மிமீ பெய்துள்ளது. விழுப்புரம் - 68 மி.மீ, வானூர் - 101 மி.மீ, திண்டிவனம் - 70 மி.மீ, மரக்காணம் - 81 மி.மீ, செஞ்சி - 59 மி.மீ,திருவெண்ணெய்நல்லூர் - 32மி.மீ 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.