

கோவையில் பாரதியார் பல்கலைக் கழக வாயிலில் மாணவி ஒருவரை பாட்டிலால் குத்திய பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருதலைக் காதல் பிரச்சினையால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் தெரி வித்ததாவது: கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத் துள்ள எம்.பாவைகுளத்தைச் சேர்ந்த வேம்புராஜ்(28) என்பவர், இந்த மாணவியுடன் முகநூலில் (பேஸ்புக்) பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொறி யியல் பட்டதாரியான வேம்புராஜ், முகநூல் மூலமாகவே அந்த மாணவியிடம் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மறுத்த தால், பிரச்சினை ஏற்பட்டுள்ளது. செல்போன் எண்களை மாற்றிய பிறகும் புதிய எண்ணில் தொடர்பு கொண்டு மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பாரதியார் பல் கலைக்கழக வாயிலில் அந்த மாணவி நின்றிருந்தபோது, அவரை பார்க்க வேம்புராஜ் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. அப்போது ஆத்திர மடைந்த வேம்புராஜ், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். அதில் அவர் படு காயமடைந்தார். உடனே அங்கி ருந்தவர்கள் மீட்டு அவரை வட வள்ளியில் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீஸார், தப்பி ஓடிய வேம்புராஜை கோவை - சிறுவாணி சாலையில் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட வேம்பு ராஜ், கோவை ஜே.எம்.6 நீதிமன்றத் தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்துள்ளார் வேம்புராஜ். சில வருடங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார்.