Published : 12 Nov 2016 01:08 PM
Last Updated : 12 Nov 2016 01:08 PM

திருப்பரங்குன்றம்: 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிக ஓட்டு வாங்கிய 78 வாக்குச்சாவடிகளை குறிவைக்கும் அதிமுக

திருப்பரங்குன்றம் தொகுதியில் 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்ற 78 வாக்குச்சாவடிகளில் அதிமுக முந்தும் வகையில் வியூகம் அமைத்து தேர்தல் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதியில் கடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.மணிமாறன் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் இத்தொகுதியை தக்கவைப்பதுடன் அதிக வாக்குகளில் வெற்றி பெற அதிமுகவும், வெற்றியை பறிக்க திமுகவும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான வாக் காளர் பட்டியல், அவர்கள் அரசியல் பின்னணி, செல்போன் எண்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரித்துள்ளனர். மேலும் கடந்த தேர்தலில் வாக்குச்சாவடி வாரியாக திமுக பெற்ற வாக்குகளை அதிமுக கணக்கிட்டு பட்டியல் தயாரித்துள்ளது. மொத்தமுள்ள 291 வாக்குச்சாவடிகளில் 213-ல் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 78-ல் திமுக முந்தியுள்ளது. திமுக அதிக வாக்குகள் பெற்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. என்ன காரணத்தால் திமுக கூடுதல் வாக்குகளை பெற்றது என்பதை ஆய்வு செய்து, அங்கு அதிமுகவிற்கு சாதகமான சூழலை உருவாக்க தீவிரம் காட்டப் படுகிறது. இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியது: கிராமப்புறங்களில் உள்ள 132 வாக்குச்சாவடிகளில் 35-ல் திமுகவும், 97-ல் அதிமுகவும் அதிக வாக்குகளை பெற்றன. திமுக கூடுதல் வாக்குகள் பெற்ற வாக்குச்சாவடிகள் விபரம்:

வடபழஞ்சியில் வாக்குச்சாவடி எண் 3, கரடிப்பட்டியில் 11, 12, நாகமலை புதுக்கோட்டையில் 17,21,22,23,24,,25,26,27, வடிவேல் கரையில் 28, மேலக்குயில்குடியில் 33, 34, விராதனூரில் 290, தோப்பூரில் 39, வேடர்புளியங்குளம்-42,43, தனக்கன்குளம்-48,49,50,52,54, விளாச்சேரி-55,61, நிலையூர் 134,138,140,141, பெருங்குடி-148, விரகனூர்-249,250, புளியங்குளம்-251, சிலைமான்-256, குசவகுண்டு-267 ஆகிய கிராமப்புற வாக்குச்சாவடிகளில் அதிமுகவைவிட திமுக அதிக வாக்குகளை பெற்றது.

மாநகராட்சியில் மொத்தம் உள்ள 159 வாக்குச்சாவடிகளில் 116-ல் அதிமுகவும், 43-ல் திமுகவும் முன்னிலை பெற்றது. இதன் விபரம்: வார்டு 95-ல் வாக்குச்சாவடிகள் 89,91,92,109,111, 112,113,114,115,116, வார்டு 96-ல் 83,84,85,100, வார்டு 97-ல் 66,67,77,78,79,80,81,117,118,119,120, வார்டு 98-ல் 63,64,65,68,69,70,71, வார்டு 99-ல் 94,95,96. வார்டு 55-ல் 242, 243, 56-ல் 231,237, 60-ல் 192,193,195,199 ஆகிய வாக்குச்சாவடிகளில் அதிமுகவைவிட திமுக கூடுதல் வாக்குகளை பெற்றது.

வார்டுகள் 94, 58, 59, 61,62-ல் திமுக ஒரு வாக்குச்சாவடியில்கூட அதிமுகவை முந்தவில்லை. வார்டுகள் 95,97,98-ல் திமுக அதிக வாக்குச்சாவடிகளில் முன்னிலை பெற்றது. அவனியாபுரம், வில் லாபுரம் பகுதியில் அமைந்துள்ள 81 வாக்குச்சா வடிகளில் 8-ல் மட்டுமே திமுக முந்தியது. திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள 78 வார்டுகளில் 35-ல் திமுக முன்னிலை பெற்றது.

கிராமப்பகுதிகளில் நாகமலைபுதுக்கோட்டை, வேடர்புளியங்குளம், நிலையூர் பிட் 2 ஆகிய கிராமப்பகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றது. மற்ற கிராமங்களில் அதிமுகவே முந்தியது. தனக்கன்குளத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் 5-ல் திமுக முந்தியது. இந்த பட்டியலை அடிப்படையாக வைத்தே அதிமுகவின் தேர்தல் வியூகம் அமைந்துள்ளது. இதற்கு வெற்றி கிடைத்தால், மொத்தமுள்ள 291 வாக்குச்சாவடிகளிலும் அதிமுக அதிக வாக்குளை பெற்ற அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x