மகாராஷ்டிரா காங். யாத்திரையில் பங்கேற்ற தஞ்சை நிர்வாகி உயிரிழப்பு: ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

மகாராஷ்டிராவில் ஒற்றுமை யாத்திரையின்போது விபத்தில் உயிரிழந்த கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி.
மகாராஷ்டிராவில் ஒற்றுமை யாத்திரையின்போது விபத்தில் உயிரிழந்த கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி.
Updated on
1 min read

தஞ்சாவூர்: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ‘யாத்திரை’ கணேசன் (60). காங்கிரஸ் கட்சியின் சேவாதள மாநகர செயலாளராகவும், 10-வதுவார்டு பொறுப்பாளராகவும் இருந்தார்.

‘யாத்திரை’ கணேசன்.
‘யாத்திரை’ கணேசன்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே காங்கிரஸ் ஒற்றுமை பாதயாத்திரையில்பங்கேற்ற கணேசன், நேற்று முன்தினம் யாத்திரை குழுவினர் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணேசன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராகுல் காந்தி,கணேசன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், நேற்று யாத்திரை தொடங்கியபோது கட்சியினருடன் சேர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in