Published : 18 Nov 2016 09:52 AM
Last Updated : 18 Nov 2016 09:52 AM

ஸ்ரீநிகேதன் குழுமம் - ‘தி இந்து நடத்தும் வல்லுநர்கள் உரையாற்றும் புத்தாக்க நிகழ்ச்சி

திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் குழுமம் மற்றும் ‘தி இந்து' இணைந்து ‘குழந்தைப் பருவம் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் வல்லுநர்கள் உரையாற்றும் புத்தாக்க நிகழ்ச்சி வரும் 20-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

மேற்கு தாம்பரத்தில் ‘ஸ்ரீநிகேதன் பாடசாலை' வரும் 2017 ஏப்ரல் 17-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. தற் போதைய கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி வரும் இக்கல்விக் குழுமம் இளை ஞர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக குழந்தைப் பருவம் மற்றும் பெற் றோர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் வல்லுநர்கள் உரை யாற்றும் நிகழ்ச்சியை ‘தி இந்து' வுடன் இணைந்து வரும் 20-ம் தேதி, காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடத்த வுள்ளது. எண்.247, ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கல்யாண் ஹோம்டெல் ஏ சரோவர் ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடை பெறும்.

இதில் இந்திய ஊட்டச்சத்து அறிவியல் கழக நிறுவன தலைவர் டாக்டர் வர்ஷா, கேர் நடத்தையியல் கழக இயக்குநரும் நரம்பியல் மற்றும் உளவியலாளருமான டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன், தி லேனர்ஸ் கான்ஃப்லூயன்ஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.செந்தில் குமரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் SNSNameagepincode ஆகிய விவரங்களை டைப் செய்து 8082807690 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x