Published : 12 Nov 2022 06:06 AM
Last Updated : 12 Nov 2022 06:06 AM

நான் கட்சித் தாவ அழைத்தேனா..! - ஓம்சக்தி சேகர் ஜோக் அடிக்கிறார்: புதுவை மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

பிள்ளைச்சாவடி பகுதியில் கடலரிப்பு பகுதிகளை பார்வையிடும் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்.

புதுச்சேரி: புதுச்சேரி அதிமுகவின் மாநில செயலாளர் அன்பழகன் மீது, முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர்நேற்று முன்தினம் கடும் குற்றச் சாட்டுகளை கூறியிருந்தார்.

அதுதொடர்பாக புதுச்சேரி அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில், “அதிமுக செயல்பாட்டை முடக்கி, கட்சியை அழிக்கநினைக்கும் திமுகவின் சதிச்செய லுக்கு துணை நின்று, திமுகவிற்கு நட்பாக செயல்படுகிறார் ஓபிஎஸ்.அவரின் அனைத்து சதி செயல்களையும் முறியடித்து காத்து வரும்பழனிசசாமியை குறைகூற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகருக்கு எந்த அருக தையும் கிடையாது. கட்சியில் இருந்து கொண்டே, திமுகவிற்கு ஆதரவாக ஓபிஸ் செயல்பட்டதன் விளைவுதான் அதிமுக ஆட்சிக்கு வராததற்கு காரணம். புதுச்சேரியில் தான் போட்டி யிட்ட சட்டமன்ற தொகுதியில் வெறும் 1,600 வாக்குகள் பெற்று, டெபாசிட்டை இழந்த சேகருக்கு மற்றவர்களை குறை கூற எந்த தார்மீக உரிமையும் இல்லை.

முன்னாள் முதல்வர் நாராயண சாமியை நான் விமர்சித்தவுடன், என்னை என்.ஆர்.காங்கிரஸின் பிடீம் என்கிறார். எங்கள் கூட்டணி யின் முதல்வருக்காக நான் பேசுவதுதவறு என்றால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வருக்காக சேகர் வக்காலத்து வாங்கி, காங்கிரஸ் கட்சியின் பி டீ மாக செயல்படுவது ஏன்? நீங்கள் என்ன காங்கிரஸ் கட்சிக்கு ஏஜெண்டா? நான் அவரை கட்சி மாற அழைத்ததாக கூறுகிறார். நல்ல ஜோக்கை சேகர் கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள தலைவர்க ளில் கட்சி மாறாத, சில தலைவர் களில் நானும் ஒருவன்” என்று தெரிவித்தார்.

கடல் அரிப்பைத் தடுக்க வலியுறுத்தல்: முன்னதாக பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்புஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைபுதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் பார்வையிட்டு பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூறினார். பின்னர் அவர் கூறுகையில், "எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல் தொடர்ந்து கடலில் கற்களை கொட்டுவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனைகள் செய்து கற்களை கொட்ட வேண் டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x