Published : 23 Jul 2014 08:46 AM
Last Updated : 23 Jul 2014 08:46 AM
நாள்தோறும் விருந்து அனுப்ப வேண்டும், மறுத்தால் துப்பாக்கி குண்டுகள் உங்களை துளைக்கும் என்று உத்தரப்பிரதேச கிராம மக்களை சம்பல் கொள்ளையர்கள் மிரட்டி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச தெற்கு எல் லையில் அமைந்துள்ள வறண்ட பகுதி புந்தேல்கண்ட். இது சம்பல் கொள்ளையர்கள் நடமாட் டத்துக்கு பெயர்போன இடம். இந்தக் கொள்ளையர்களின் பிடியில் சிக்கி, அங்குள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
தற்போது இங்கு பயங்கர கொள்ளையனாக இருக்கும் பல்கேடியா படேல், 60-க்கும் மேற் பட்ட சகாக்களுடன் சுற்றித் திரிவ தாக கூறப்படுகிறது. புந்தேல் கண்ட் பகுதி கிராம மக்களுக்கு பல்கேடியா ஒரு நிரந்தர உத்தர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி அவனது கொள்ளைக் கும்பலுக்கு ஒவ்வொரு கிராமத் தினரும் ஒருநாள் விருந்து அளிக்க வேண்டும். இல்லையெனில் துப் பாக்கி குண்டுகளுக்கு இரையாக வேண்டியிருக்கும் என்பதுதான் அந்த மிரட்டல் உத்தரவு.
இதுகுறித்து புந்தேல்கண்ட், பாந்தா மாவட்ட கிராமவாசிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்தப் பகுதியில் அரசு ஒப்பந்தப்பணி செய்பவர்களிடம் பணம் பறிப்பதும், ஆட்களை கடத்தி பிணைத் தொகை வசூலிப்பதும் அவனது தொழில். அவனது கும்பலுக்கு ‘ஒவ்வொரு கிராமமும் ஒருநாள்’ என பேசிவைத்து விருந்து தயாரித்து அவன் கூறும் இடத்துக்கு ரகசியமாக அனுப்ப வேண்டும். சிலநாள் அவனே திடீரென தன் ஆட்களுடன் கிராமத்துக்கு வந்து சாப்பிட்டுச் செல்வான்.
இதை எதிர்த்த கிராமவாசிகள் பலர், துப்பாக்கிகளின் பின்கட்டை யால் அவனிடம் அடி வாங்கி யிருக்கிறார்கள். குண்டுகளுக்கு இரையாகி விடுவோம் என்று பயந்து விருந்து அனுப்ப இங்கு யாரும் மறுப்பதில்லை” என்றனர்.
பல்கேடியாவின் தலைக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் ரூ.2 லட்சம் பரிசு அறி வித்துள்ளனர். எனினும் பல்கேடி யாவுக்கு பயந்து அவனை காட்டிக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
பிரபல கொள்ளைக்காரி பூலான்தேவிக்கு பிறகே சம்பல் பள்ளத்தாக்கு வெளி உலகுக்கு முழுமையாக தெரிய வந்தது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என 3 மாநிலங்களில் சம்பல் பள்ளத் தாக்கு பரவியுள்ளது. இதனால் கொள்ளையர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் புகுந்து தப்பி விடுகின்றனர்.
எனினும், சம்பல் பள்ளத் தாக்கின் பிரபல கொள்ளையர் களான தத்துவா, தோக்கியா, குர்ஜர் போன்றவர்கள் உ.பி. அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மனம் திருந்தி சரணடைந்த பின் சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.