50,000 விவசாயிக்கு இலவச மின் இணைப்பு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

50,000 விவசாயிக்கு இலவச மின் இணைப்பு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த தடாகோவில் பகுதியில் இன்று (நவ.11) நடைபெறும் விழாவில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை வகிக்கிறார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார். கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம்உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in