Published : 30 Nov 2016 08:14 AM
Last Updated : 30 Nov 2016 08:14 AM

வண்டலூர் மீஞ்சூர் சாலையில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலி: லாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், திரு வேற்காடு சிவசங்கர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரிகரன்(17). திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி யில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது நண்பர் பாலகிருஷ்ணன் (18). பூந்தமல்லி பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் பட்டயப் படிப்பு படித்து வந்தார்.

இருவரும் அவர்களது நண்பர் களுடன் விடுமுறை நாட்களில் வண்டலூர்- மீஞ்சூர் வெளி வட்டச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, அதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயி றன்று ஹரிகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் பூந்தமல்லி அருகே மலை யம்பாக்கம் பகுதியில் மோட் டார் சைக்கிள் பந்தயம் நடத்தி யுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஹரிகரன், பாலகிருஷ் ணன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் சாலையில் சறுக்கி விழுந்தன. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, இருவரும் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

மேலும், வண்டலூர்- மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் அடிக்கடி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மோட்டார் சைக் கிள் ரேஸ் மற்றும் ஆட்டோ ரேஸ் நடத்துகின்றனர். உயிரிழப்பு களை ஏற்படுத்தும் இந்த ரேஸ்கள் நடக்காமல் இருக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாரி விபத்தில் 2 பேர் பலி

மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று, படாளம் கூட்டுச் சாலை யில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதே திசையில் திண்டி வனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரியின் ஓட்டுநரான தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜ் குமார்(30), அவரது உறவினர் வெங்கடேசன்(40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக படாளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x