

கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ஆட்டோவில் 200 கிலோ செம்மரத் துண்டுகளை கடத்த முயன்றவரை போலீஸார் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாமிரெட்டிகண்டிகை பகுதியில், ஜி.என்.டி. சாலையில் நேற்று கும்மிடிப்பூண்டி போலீஸார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது, பெத்திக்குப்பம் அருகே உள்ள கம்மவார்பாளையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், சரக்கு ஆட்டோவில் இருந்த பழைய இரும்பு கதவு களுக்கு அடியில், இரண்டரை மற்றும் ஒரு அடி அளவு கொண்ட 27 செம்மரத் துண்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, 200 கிலோ எடை கொண்ட செம்மரத் துண்டு களை சரக்கு ஆட்டோவுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவ ரிடம் போலீஸார் நடத்திய விசா ரணையில் அவர் சென்னை, வண் ணாரப் பேட்டையைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. அவரை கும்மிடிப்பூண்டி வனத் துறையின ரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.