மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் 

பட்டாசு விபத்து நடந்த ஆலை
பட்டாசு விபத்து நடந்த ஆலை
Updated on
1 min read

சென்னை: மதுரை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் பூரணநலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் இவ்வரசை வலியுறுத்துகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in