மதுரை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

வெடி விபத்து நடந்த இடம்
வெடி விபத்து நடந்த இடம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில், அருகில் இருக்கக்கூடிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் கோயில் திருவிழாக்கள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்துவதற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இன்று வழக்கம்போல், 15-க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த கட்டடம் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in