தமிழகம்
கலாமின் சகோதரர் 100-வது பிறந்த நாள்: ராமேசுவரத்தில் கொண்டாட்டம்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்துமீரா மரைக்காயர் தனது 100-வது பிறந்த நாளை ராமேசுவரத்தில் நேற்று விமரிசையாகக் கொண்டாடினார். தனது சகோதரர்கள் முஸ்தபா கமால், காசிம் முகம்மது, சகோதரி அஜிம் ஜொகரா ஆகியோரின் குடும்பத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி விருந்தளித்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கலாமின் நண்பர்களான ஒய்.எஸ்.ராஜன், ஷெரிடன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசும்போது, “காமெடி நடிகனாக இருந்த என்னை ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்ற இலக்கை எனக்கு கலாம் அளித்து அங்கீகாரம் அளித்தார். இதுவரையிலும் 27 லட்சத்து 73 ஆயிரம் மரங்களை கலாமின் ஆசியுடன் நட்டுள்ளேன்” என்றார்.
