Published : 18 Nov 2016 09:53 AM
Last Updated : 18 Nov 2016 09:53 AM

புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை

புதுச்சேரியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜான்குமார் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டப்பேரவை உறுப் பினர் ஜான்குமார். முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற் காக இவர் சட்டப்பேரவை உறுப் பினர் பதவியை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நெல்லித்தோப்பு சவரி படையாச்சி வீதியில் உள்ள ஜான்குமாரின் வீடு மற்றும் அலு வலகத்தில் சென்னை வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்த சோத னையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நெல்லித்தோப்பு இடைத்தேர் தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், ஜான்குமார் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்று மீண்டும் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து வந்த 9-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் ஜான்குமார் வீட்டில் சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிமுதல் செய்தனர். மேலும், ஜான்குமாரின் உதவியாளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை செய்தனர்.

வருமான வரித் துறை அதி காரிகள் வந்தபோது ஜான்குமார் வீட்டில் இருந்ததால் அவரை அதிகாரிகள் வெளியில் அனுமதிக்க வில்லை. இதனால் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் 12 மணியள வில் ஜான்குமார் வருமான வரித் துறையினரிடம், தான் பிரசாரத் துக்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு முதல்வர் நாராயணசாமி யின் வீட்டுக்கு வந்த அவர் அப் போது நிருபர்களிடம் கூறியதாவது: வருமான வரித் துறையினர் காலை 6 மணிக்கு எனது வீட்டுக்கு வந்து என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் எழுப்பி தொந்த ரவு செய்தனர். நான் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். அதற்கு அனுமதிக்காமல் அரை மணி நேரத்தில் விட்டுவிடுவதாகக் கூறினர். வலுக்கட்டாயமாக வெளியே வந்துள்ளேன். பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சோதனை நடத்தினர். மத்தியில் ஆளும் பாஜகவும், புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகளும் சேர்ந்து செய்த சதிதான் இதற்குக் காரணம் என்றார். ஜான்குமார் மேலும் கூறும்போது, வீட்டில் இருந்த ரூ. 14 லட்சத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x