

திருவள்ளூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவி.தங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழை எளியோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
திருவேற்காடு முன்னாள் நகராட்சி கவுன்சிலரான தேமுதிக நகரச் செயலாளர் கேபிஎஸ்.இளையராஜா, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போலி ஆவணங்களைத் தயாரித்து தனது குடும்பத்தினருக்கும் நண்பர் களுக்கும் உறவினர்களுக்கும் முறைகேடாக நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுதொடர் பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன் றம், எனது மனுவைப் பரிசீலிக்கும் படியும், நலத்திட்ட உதவிகளைப் பெற்ற வர்கள் உண்மையான பயனாளிகள் தானா என்பது குறித்து விசாரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அதிகாரிகள் மதிக்க வில்லை. இதுவரை தகுதியில்லாத பயனாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருவேற்காடு பகுதியில் மட்டும் 26 தகுதியில்லாத பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர் வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தகுதியில்லாத 26 பேருக்கு வழங்கப் பட்ட நலத்திட்ட உதவிகளைத் திரும்பப் பெறுவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதுபோல தவறு செய்த அதிகாரி மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதி பதிகள், ‘‘இதேபோல கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலகட்டத்திலும் பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது. எனவே, அரசின் நலத்திட்ட உதவிகளை தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை 6 மாதங்களுக்குள் சமூக நலத்துறை இயக்குநர் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.