ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது: நிபுணர்கள், பிரபலங்கள் கருத்து

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது: நிபுணர்கள், பிரபலங்கள் கருத்து
Updated on
1 min read

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு பற்றி பொருளாதார நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் கூறியிருப்பதாவது:

சோம.வள்ளியப்பன் (பொருளாதார நிபுணர்):

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக் கையில் இது ஒரு அதிரடி நடவடிக்கை. அதேசமயம் அதிர்ச்சி அளிக்கக் கூடிய நடவடிக்கை. கருப்புப் பணம் வைத்திராத சாதாரண மக்கள் பலரும் 500 ரூபாய் நோட்டு களை வைத்துள்ளனர். இந்நிலையில், கால அவகாசம் அளித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். இன்று (நேற்று) இரவிலிருந்தே 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு சாதாரண மக்களை பாதிக்கும். மேலும் 1,000 ரூபாய் நோட்டோடு இந்த நடவடிக்கையை நிறுத்தி இருக்கலாம்.

சார்லஸ் லோபோ (தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி):

இந்த உத்தரவு தற்போதுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக உடனடியாக கருத்து சொல்ல இயலாது.

துரை.ரவிக்குமார் (விசிக பொதுச் செயலாளர்):

கருப்பு பணத்தை ஒழிப்பதற் காக அறிவித்தது வரவேற்கத்தக்கது. எனினும் இது சாதாரண மக்களை பாதிக் காமல் இருக்காது. கருப்பு பணம் புழங்கு கிற இடமே தேர்தல் களம்தான். தேர்தல் நேரங்களில் பணப்புழக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லை என்று தேர்தல் ஆணை யமே சொல்கிறது. எனவே, நமது அரசியல் அமைப்பின்படி கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பது மட்டுமே தீர்வாகாது.

த.வெள்ளையன் (வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்):

கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இது பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, கருப்பு பணத்தை ஒழிக்க வேறு ஏதாவது உபாயங்கள் உள்ளனவா என்று பொருளாதார மேதைகளைக் கொண்டு யோசிக்க வேண்டும். ஆட்சி தங்கள் வசம் இருக்கிறது என்று மக்களை சிரமப்பட வைப்பது நியாயமல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in