இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் நியமனம்

இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக நியமனம் பெற்ற வழக்கறிஞர் கருணாநிதி.
இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக நியமனம் பெற்ற வழக்கறிஞர் கருணாநிதி.
Updated on
1 min read

மதுரை: இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் மா.கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு 22-வது சட்ட ஆணையத்தை அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பாலிவால், டி.பி.வர்மா, ரக ஆர்யா, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் மா.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வழக்கறிஞர் கருணாநிதி தமிழகத்தைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 1995-ல் சட்டப்படிப்பு முடித்து தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். கடந்த 2004 முதல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது வழக்கறிஞராக உள்ளார்.

தமிழக க்யூ பிராஞ்ச் சிஐடி வழக்கறிஞராக இருந்துள்ளார். சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளார். பல சட்டக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர் கருணாநிதிக்கு உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in