

சென்னை: சென்னையின் மிகப் பழமையான பகுதிகளுள் ஒன்று ஜார்ஜ் டவுன். இந்தப் பகுதி இன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், இந்தப் பகுதியில் போதுமான சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னை - ஜார்ஜ் டவுன் பகுதியில் சிறிய, பெரிய என்று பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியை மறு சீரமைப்பு செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக அங்குள்ள பொதுமக்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஜார்ஜ் டவுன் பகுதியில் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: