

சென்னை: நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஒடிசா மாநிலத்தில் உள்ள புதிய சுரங்கங்களில் இருந்து 64 கோடி கிலோ கூடுதல் நிலக்கரி எடுத்துவர, மத்திய அரசின் மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு தமிழக மின்வாரியம் ரூ.54 கோடி செலுத்தியுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஒடிசா மாநிலத்தில் உள்ள பரத்பூர், கர்ஜன்பால், பல்ராம், லக்னபூர், குல்டவ், அனந்தா, ஹின்குலா ஆகிய சுரங்கங்களில் இருந்து 64 கோடி கிலோ நிலக்கரியை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசின் மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு தமிழக மின்வாரியம் ரூ.54 கோடி செலுத்தியுள்ளது. முதல்கட்டமாக 32 கோடி கிலோ நிலக்கரி எடுத்துவரப்பட உள்ளது.