

சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களை குடியிருப்பு உரிமையாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுத்து பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சமீபத்தில் நடந்துள்ள சில குற்றச்செயல்களில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூகவிரோதிகள் குடியிருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாடகை தாரர்கள் என்ற பெயரில் தீவிர வாதிகள் மற்றும் சமூக விரோதி களும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னை மாநகர குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாடகை தாரர்கள் குறித்து அவர்களுடைய பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, குடியிருப்பு உரிமை யாளர்கள் மற்றும் வீட்டு உரிமை யாளர்கள் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விவரம் அல்லது வேறு நபருக்கு தங்குவதற்காக அனுமதி வழங்கியிருந்தால், அது தொடர் பான விவரங்களை அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிக்கு உரிய படிவம் வாயிலாக உடனடியாகத் தெரியபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாடகை தாரர்கள் என்ற பெயரில் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதி களும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பு உள்ளது.