Published : 09 Nov 2022 06:55 AM
Last Updated : 09 Nov 2022 06:55 AM
சென்னை: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில், போலிமற்றும் கடத்தல் பொருட்கள் சந்தையைதடுக்கும் யுக்திகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணிபங்கேற்று பேசியதாவது: போலிமற்றும் கடத்தல் பொருட்கள் வணிகத்துக்கும், தொழில் துறைக்கும், பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.முன்பு,கடத்தல் கைக்கடிகாரம், கள்ளநோட்டு விநியோகம் போன்றவை அதிகளவில்புழக்கத்தில் இருந்தன இதேபோல் கடத்தல் தங்கம் மிகப் பெரிய தொழிலாக இருந்து வந்தது.
இவையனைத்தும் அரசின் பல்வேறுநடவடிக்கைகளால் குறைந்துள்ளன. தமிழகத்தில் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிலர்அரிசி கடத்தலில் ஈடுபட்டு, அரசுக்கும்,பொதுமக்களுக்கும் இழப்பு ஏற்படுத்திவருகின்றனர். இதைத் தடுக்க அரசுபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, போலி பாஸ்வேர்டு, போலி கிரெடிட் கார்டு, போலி முகநூல்பக்கம் என நவீன முறையில் தவறானவணிக நடைமுறைகள் வளர்ந்துள்ளன. இவற்றையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் ஃபிக்கி தமிழ்நாடு பிரிவு தலைவர் வேலு, இணை தலைவர்பூபேஷ் நாகராஜன், சென்னை சுங்கத் துறை ஆணையர் ரவீந்திரநாத், காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT