

தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்குள் அமைச்சர்கள் அனைவரும் முடங்கியுள்ளனர் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
அதிமுகவுக்கு சட்டப்பேர வையை நடத்தவே தெரியவில்லை. அரசு நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளுக்குள் முடங்கிவிட்டனர். சட்டப்பேரவைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காவிரி பிரச்சினையில் 205 டிஎம்சி தண்ணீரை பெற்றுதந்தது திமுகதான். முக்கியமான அணைகள், கால்வாய்கள், குடிநீர் மற்றும் பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கொண்டுவரப்பட்டன. அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மட்டுமே அதிமுக உச்சநீதிமன்றம் சென்றது.
உதய் திட்டம், ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம் ஆகிய வற்றில் அதிமுகவின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது. இந்த ஆட்சி சரியான வழிகாட்டுதலில்தான் நடக்கிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சர்கள் தேர்தல் பணிக ளுக்கு இடையே பால்குடம், பிரார்த்தனையில்தான் கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்கு மக்களைப் பற்றியும், ஆட்சி நிர்வாகம் பற்றியும் சிறிதுகூட அக்கறையில்லை. மூன்று தொகுதிகளிலும் திமுகவை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், முன்னாள் சட்டப்பேரவைத் தலை வர் சேடப்பட்டி முத்தையா, முன்னாள் அமைச்சர்கள் பூங்கே ாதை ஆலடி அருணா, அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ் ராஜன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், திமுக மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், நகர் மாவட்டச் செயலாளர் தளபதி, வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.