தமிழகத்தின் 17வது காட்டுயிர் காப்பகம் | தருமபுரி, கிருஷ்ணகிரியில் அமைத்து அரசாணை வெளியீடு

கோப்புப் படம் |
கோப்புப் படம் |
Updated on
1 min read

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 686 ச.கி.மீ. பகுதியை காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்." இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in