எலி காய்ச்சலால் பெண் உயிரிழப்பு: பொள்ளாச்சி அருகே மருத்துவ முகாம்

எலி காய்ச்சலால் பெண் உயிரிழப்பு: பொள்ளாச்சி அருகே மருத்துவ முகாம்
Updated on
1 min read

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் வனிதா (23). 5 மாத கர்ப்பிணியான இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 22-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் குணமாகவில்லை.

இதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருக்கு காய்ச்சல் குறையாததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த கிராமத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, மருத்துவப் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in