தமிழக மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

சென்னை: இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 2 படகுகளை மீட்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த நவ.5-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவர் சமூகத்தினர் மத்தியில் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in