மதுரை | 35 ஆண்டாக மின் வசதியின்றி தவிக்கும் ஏழைகாத்தம்மன் காலனி மக்கள் - பள்ளி மாணவர்களுடன் ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலூர் அருகேயுள்ள ஏழைகாத்தம்மன் காலனி மக்கள் மின்சார வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலூர் அருகேயுள்ள ஏழைகாத்தம்மன் காலனி மக்கள் மின்சார வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: மதுரை மேலூர் அருகே 35 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் ஏழைகாத்தம்மன் காலனி மக்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மின்சார வசதி செய்துதர வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கோாிக்கை மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலூர் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி ஏழைகாத்தம்மன் காலனி மக்கள் பள்ளி மாணவர்களுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், "35 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலமான ஏழைகாத்தம்மன் காலனியில் 75 குடும்பத்தினரும், 290 மக்களும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறோம். அரசு வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை, குடு்மப அட்டை, 100 நாள் வேலை அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளோம். எங்கள் பகுதியில் 35 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை. குறிப்பாக 35 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி வசித்து வருகிறோம். பள்ளி மாணவர்கள் இரவில் படிக்க சிரமப்படுகின்றனர். மேலும் மலையடிவாரம் அருகில் வசிப்பதால் இரவில் பாம்புகள் போன்ற விஷ உயிரினங்களின் நடமாட்டம் அதிகமுள்ளது. எனவே மின்சார வசதி செய்து தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in