

எம்ஜிஆர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமனை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
சென்னையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமாக சத்யா ஸ்டுடியோ, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளி, ராமாவரம் தோட்டம், ஆலந்தூர் மார்க் கெட், எம்ஜிஆர் நினைவு இல்லம் என ஏராளமான சொத்துகள் உள்ளன. இது தொடர்பாக 1987-ல் உயில் எழுதி வைத்திருந்த எம்ஜிஆர், தனது மற்றும் தனது மனைவி ஜானகியின் மறைவுக்கு பிறகு இந்த சொத்துகளை என்.சி. ராக வாச்சாரி, தனது உறவினரான ராஜேந் திரன் ஆகியோர் நிர்வகிக்க வேண்டும். அவர்களுக்குப் பிறகு நிர்வாகி யார்? என் பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சத்யா ஸ்டுடியோவைப் பொருத்தமட் டில் அதன் பங்குகளில் ஒரு பகுதி அதிமுக வுக்கும், ஒரு வேளை கட்சி கலைக்கப் பட்டாலோ அல்லது உடைந்தாலோ அந்த பங்குகள் எம்ஜிஆர் அறக்கட்டளைக்கும் செல்ல வேண்டும் எனவும் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளார். ராமாவரம் தோட்டத் தின் ஒரு பகுதி உறவினர்களுக்கும், மற்றொரு பகுதி காது கேளாதோர் பள்ளி அறக்கட்டளைக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் கடந்த 2013-ல் இறந்த பிறகு அவரது மனைவியும், எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களில் ஒருவருமான லதா ராஜேந்திரன் தற்காலிக நிர்வாகியாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் லதா ராஜேந்திரன் தன்னை நிரந்தர நிர்வாகியாக நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் லதாவை நியமிக்கக் கூடாது என்று கூறி எம்ஜிஆரின் அண்ணன் எம்.சக்ரபாணியின் மகனான எம்.சி. சந்திரன், கீதா மதுமோகன், என். சுவாமிநாதன், சுதா விஜயகுமார் உட்பட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தனது கோடிக்கணக்கான சொத்து களை நிர்வகிப்பதில் உறவினர்களுக்குள் போட்டா போட்டியோ அல்லது வில்லங்கமோ ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் எம்ஜிஆர் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி இப்படி ஒரு உயிலை 1987-ல் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும்? இந்த சொத்துகளை யாரெல் லாம் நிர்வகிக்க வேண்டும்? என்பது கூட தெளிவாக உயிலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி எம்ஜிஆர் அறக் கட்டளைக்குச் சொந்தமான கோடிக்கணக் கான சொத்துகளை நிர்வகிக்கும் நிர் வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமனை இந்த உயர் நீதிமன்றம் நியமிக்கிறது. இதற்காக அவருக்கு மாதம் தோறும் ரூ.ஒரு லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர் சொத்துகளை ஆய்வு செய்து 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு வேண்டிய உதவிகளை எம்ஜிஆரின் உறவினர்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.