தஞ்சையில் ஸ்டாலின், திருப்பரங்குன்றத்தில் ஓபிஎஸ் இறுதிகட்ட பிரச்சாரம்: 4 தொகுதிகளில் தீவிர போலீஸ் பாதுகாப்பு

தஞ்சையில் ஸ்டாலின், திருப்பரங்குன்றத்தில் ஓபிஎஸ் இறுதிகட்ட பிரச்சாரம்: 4 தொகுதிகளில் தீவிர போலீஸ் பாதுகாப்பு

Published on

தமிழகம், புதுச்சேரியில் நாளை (19-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் தலை வர்கள், வேட்பாளர்கள், நடிகர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் சூறா வளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், இரா.துரைக் கண்ணு, வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நடிகர்கள் கருணாஸ் எம்எல்ஏ, ராமராஜன், வையாபுரி ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து, தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் எதிரில் இருந்து நேற்று, வீதி வீதியாகச் சென்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடு பட்டார். பழைய பேருந்து நிலை யம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தேமுதிக சார்பில், அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாமக சார் பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தஞ்சாவூர் தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து அமைச் சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ் கர், பாலகிருஷ்ணரெட்டி, கே.சி.வீர மணி, கே.சி.கருப்பண்ணன், நிலோபர்கபில், கே.பி.அன்பழகன், சரோஜா, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்பிக்கள் அன்வர்ராஜா, அசோக்குமார் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மைதீன்கான், மாவட் டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பாஜக வேட்பாளர் எஸ்.பிரபு, தேமுதிக வேட்பாளர் அரவை முத்து, பாமக வேட்பாளர் பிஎம்கே.பாஸ்கர், நாம் தமிழர் கட்சி அரவிந்த் ஆகியோரும் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி யில் அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் திருப்பரங் குன்றத்தில் அதிமுகவினர் ஊர்வல மாக வந்து வாக்கு சேகரித்தனர். திமுக வேட்பாளர் பா.சரவணன், பாஜக வேட்பாளர் ஆர்.னிவாசன் ஆகியோர் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாகனங்களில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆங்காங்கே வாகன ஊர்வலம் நடத்தினர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா திருப்பரங் குன்றம் உட்பட 15 இடங்களில் பேசினார்.

நெல்லித்தோப்பு

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முதல்வர் நாராயண சாமிக்கு ஆதரவாக திமுக பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங் கோவன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், நடிகர்கள் ஆனந்தராஜ், சிங்கமுத்து மற்றும் அனிதா குப்புசாமி, பாத்திமா பாபு உட்பட பலர் பிரச்சாரம் செய்தனர்.

நேற்று மாலை பிரச்சாரம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தொகுதிக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை மாலை 5 மணி வரை நீடிக்கும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி சத்தியந்திர சிங் துர்சாவத் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து நடைபெற்ற இறுதிகட்ட ஊர்வலத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.

படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தஞ்சாவூர் பாலாஜி நகரில், திமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர் அஞ்சுகம் பூபதி.

படம்:ஆர்.எம்.ராஜரத்தினம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in