‘அதிக பதக்கங்கள் வெல்ல வேண்டும்’: விளையாட்டு மேம்பாடு குறித்து அமைச்சர் ஆலோசனை - சாதனை வீரர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

‘அதிக பதக்கங்கள் வெல்ல வேண்டும்’: விளையாட்டு மேம்பாடு குறித்து அமைச்சர் ஆலோசனை - சாதனை வீரர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
Updated on
1 min read

தேசிய, ஆசிய, தெற்காசிய, ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் க.பாண்டி யராஜன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள், துரோணாச்சாரியார் விருது, அர்ஜுனா விருது பெற்ற தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலை மையில் சென்னையில் நடந்தது.

எதிர்வரும் தேசிய, ஆசிய, தெற்காசிய விளையாட்டுப் போட்டி கள், டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஏராள மானோர் பங்கேற்று, அதிக அளவில் பதக்கங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் க.பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். விளை யாட்டு முன்னேற்றத்துக்காக தொடர்ந்து இக்கூட்டம் நடத்தப் படும் என்றும் இதில் தெரி விக்கப்பட்டது. அனைவரின் ஆலோசனைகள் மூலம் தமிழகத் தில் விளையாட்டு மேம்பாட்டுக்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், விளையாட்டு வீரர்களின் ஆற்றல் எல்லா வகையிலும் சிறப்படைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை முதன்மைச் செயலர் ராஜேந்திரகுமார், தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரிகள், துரோணாச்சாரியார் விருது, அர்ஜுனா விருது பெற்ற 14 விளையாட்டு வீரர்கள், வீராங் கனைகள், பயிற்சியாளர்கள், 53 தமிழ்நாடு விளையாட்டு சங் கங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கப் பிரதிநிதிகள், ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழக பேராசி ரியர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in