விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசனின் தாயார் சரோஜா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசனின் தாயார் சரோஜா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசனின் தாயார் சரோஜா காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விகடன் குழுமத்தின் தலைவர் பா.சீனிவாசனின் தாயாரும், மறைந்த முன்னாள் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியனின் மனைவியுமான சரோஜா (86), உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று காலைகாலமானார். அவரது உடல்சென்னை மயிலாப்பூர் பிஷப் வாலர்ஸ் அவென்யூவில் உள்ளவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு வரும் 9-ம்தேதி நடைபெறுகிறது.

தலைவர்கள் இரங்கல்:

முதல்வர் ஸ்டாலின்: விகடன்குழுமத்தின் மேலாண் இயக்குநர்சீனிவாசனின் தாயாரும், பாலசுப்பிரமணியனின் துணைவியாருமான சரோஜா பாலசுப்பிரமணியன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அன்பு அன்னையை இழந்து தவிக்கும் சீனிவாசன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: சரோஜா பாலசுப்பிரமணியனைஇழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சீனிவாசன், விகடன் குழும பணியாளர்கள், குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in