Published : 27 Nov 2016 10:27 AM
Last Updated : 27 Nov 2016 10:27 AM

மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பெருகிவரும் பாலியல் விடுதிகள்: உயர் நீதிமன்றம் வேதனை

தமிழகத்தில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் புற்றீசல்போல் பாலியல் விடுதிகள் பெருகி வருகின்றன. சமூகத்துக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் இந்த விடுதிகளை தடுத்து நிறுத் தாவிட்டால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி யது வரும் என உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண் ஒருவரை மசாஜ் சென்டர் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியது தொடர்பாக போலீஸார் தேடி வரும் ஒருவர், உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

மசாஜ் சென்டர் ஒன்றில் பாலி யல் தொழில் நடப்பதாக போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத் ததையடுத்து அந்த மசாஜ் சென் டரில் போலீஸார் சோதனை நடத்தி னர். அப்போது அங்கு சில ஆண் கள் நிர்வாணமாகவும், பெண்கள் சிலர் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளனர். அவர்கள் போலீ ஸாரை பார்த்ததும் ஓட்டம் பிடித் துள்ளனர். அதில் ஒரு பெண் தனக்கு வேலை வாங்கித் தருவ தாக கூறி இந்த மசாஜ் சென்ட ரில் சேர்த்துவிட்டு, பாலியல் தொழில் செய்யுமாறு கட்டாயப் படுத்தியதாக மனுதாரர் மீது புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பாலியல் விடுதிகள் புற்றீசல்போல் பெருகிக் கொண்டு வருகின்றன. இது போன்ற விடுதிகளில் அப்பாவி பள்ளி, கல்லூரி மாணவிகள் பணத் துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதுபோன்ற மசாஜ் சென்டர்கள் சமூகத்துக்கு அழிக்க முடியாத கறை மற்றும் வடுக்களை ஏற்படுத் துவதுடன் பல்வேறு நோய்கள் பர வவும் காரணமாக அமைகின்றன.

இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் மனுதார ருக்கு முன்ஜாமீன் மறுக்கப்படு கிறது. அவர் வேறு பெண்கள் யாரையாவது இவ்வாறு ஏமாற்றி உள்ளாரா என்பதை அவரை விசா ரிக்க வேண்டியது அவசியம். இதனால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x