

சென்னை: நீதித்துறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் எனஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்திஉள்ளார். மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இதில்சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் சென்னை உயர் நீதின்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஒவ்வொரு நாளும் புதுப்பது மாற்றத்தை காண்கிறோம். இது சட்டத்துறையிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தற்போது தொழில்நுட்பங்களும் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு வளரும் தொழில்நுட்பம் மூலமாக மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது.
இத்தகைய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்துறை இருக்க வேண்டும். இதன் மூலம் நீதிவழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பார்அசோசியேசன் புதுப்புது சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். பெண்களும் படிப்படியாக சமூக பங்காற்றி வருகின்றனர். இந்த போட்டியில்கூட ஏராளமான மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, "மக்கள் தொகை, பொருளாதார மந்தநிலைமற்றும் வளங்களின் பற்றாக்குறைஅதிக வழக்குகள் உருவாக காரணமாகிறது. இதனால் அதிக வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர். வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில், மெட்ராஸ் பார்அசோசியேசன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், செயலர் டி.னிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.