அமைச்சர் அன்பில் மகேஸ் | கோப்புப் படம்
அமைச்சர் அன்பில் மகேஸ் | கோப்புப் படம்

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்: அன்பில் மகேஸ் தகவல்

Published on

சென்னை: மழை காரணமாக பள்ளிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் சென்னையில் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘‘நடப்பு ஆண்டுபாடத்திட்டம் முழுமையாக நடத்தி முடிக்க வேண்டிய நிலைஉள்ளது. மழை காலத்தில் வழங்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய, தேவைக்கேற்ப சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மாற்று வகுப்புகள் மூலம் பாடம் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in