Published : 14 Nov 2016 08:14 PM
Last Updated : 14 Nov 2016 08:14 PM

அம்மா பெஸ்ட் அறக்கட்டளை சார்பில் 29 மாணவர்களுக்கு கல்விக்கட்டணம்: மதுசூதனன் வழங்கினார்

அம்மா பெஸ்ட் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், பல் மருத்துவம், அறிவியல் படிக்கும் 29 மாணவ, மாணவியருக்கான கல்விக்கட்டணம் ரூ.21.11 லட்சத்தை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வழங்கினார்.

இது தொடர்பாக அம்மா பெஸ்ட் நல அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்,பிஇ,பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் சேரும் ஏழை மாணவ, மாணவியர் தங்கள் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்களுக்கு, அம்மா பெஸ்ட் நல அறக்கட்டளையில் இருந்து நிதியுதவி வழங்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும், எஸ்.நஸ்ரின், எம்.சந்திர மவுலி, எம்.விக்னேஷ், எஸ்.அரிகரன், ஏ.ஜெயஸ்ரீ, ஜி.தினேஷ்ராம், டி.ஜெகதீஸ், டி.லோகேஸ்வரன், ஜெ.கவுரிசங்கரி, எம்.சரவணக்குமார், கே.மோகன்ராஜ், வி.மாதவன், ஆர்.வி.ராசிகா, கே.சாந்தினி, ஆர்.மனோஜ்குமார், ஆர்.செல்வ பாண்டி,டி.இலக்கியா எழிலரசி, எஸ்.ஜே.சூரிய பிரகாஷ், பி.கோகிலா, டி.கார்த்திக், எம்.மகேஷ்குமார், எஸ்.சரிதா, எம்.சுர்ஜித், எம்.பிருந்தாதேவி,ஆர்.குட்ரோசன் மற்றும் பிடிஎஸ் படித்து வரும் எஸ்.படையப்பா, பொறியியல் படிப்பு மாணவர்கள் ஆர்.பழனிவேல், ஜி.சவுமியா, பிஎஸ்சி படிக்கும் ஆர்.பிரியதர்ஷிணி ஆகிய 29 பேருக்கும் கல்லூரி கட்டணம் ரூ.21 லட்சத்து 11 ஆயிரத்து 268க்கான வரைவோலையை வழங்கினார்.

வரைவோலையை பெற்றுக் கொண்ட மாணவர்கள், முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x