

டெல்லியில் நடைபெற்ற தமிழக- இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழக- இலங்கை மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக இந்திய வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை நாளை (நவ.5) டெல்லியில் நடைபெற உள்ளது.
வானிலை சீரானதும் வருகை
இந்நிலையில், யாழ்ப்பா ணம் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தங்க மணி, பிரதீப், அருண், சண்முக வேல், கோபு ஆகியோர் நேற்று முன்தினம் இரவும், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ராமர், முனியசாமி, ராஜேந்திரன், முனீஸ் வரன் ஆகிய நான்கு பேர் நேற்றும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த 9 மீனவர்களும் யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் வானிலை சீரானதும் மீனவர்கள் தலைமன்னாரில் இருந்து இலங்கை கடற்படையினரால் ஓரிரு நாளில் அழைத்துவரப்பட்டு சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.