Published : 04 Nov 2016 09:08 AM
Last Updated : 04 Nov 2016 09:08 AM

சர்வதேச தரத்தில் தயாராகவுள்ள தேஜஸ் ரயில் பெட்டியின் புதிய வடிவமைப்பு சென்னை ஐசிஎப்-க்கு வந்தது: தயாரிப்பு பணி குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சர்வதேச தரத்தில் தயாராகவுள்ள ‘தேஜஸ்’ ரயில் பெட்டியின் புதிய வடிவமைப்பை ரயில்வே வாரியம் சென்னை ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐசிஎப்) அனுப்பியுள்ளது.

இந்தியாவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் சரா சரியாக 2.36 கோடி பேர் பயணம் செய்கின்றனர். சுமார் 2.7 மில்லி யன் டன் சரக்கு கையாளப்படுகிறது. மத்திய அரசு ரயில்வேத் துறையை மேம்படுத்தும் வகையில் தனியார் துறையுடன் இணைந்து பயணி களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.

ரயில்களுக்கு தேவையான இன்ஜின்கள், பயணிகள் பெட்டி, சரக்குப் பெட்டி ஆகியவை நாடு முழுவதும் 7 இடங்களில் தயாரிக் கப்படுகின்றன. இவற்றில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் (இணைப்புப் பெட்டி தொழிற்சாலை) மற்றும் பஞ்சாபில் உள்ள ஆர்சிஎப் (ரயில் பெட்டி தொழிற்சாலை) ஆகிய 2 இடங்களில் மட்டுமே பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி, சர்வதேச தரத்தில் ‘தேஜஸ்’ என்ற பெயரில் நவீன சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது. தேஜஸ் சொகுசு ரயிலுக்கான அதிநவீன பெட்டியின் புதிய வடிவமைப்பை மத்திய ரயில்வே வாரியம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-க்கு அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். புதிய ரயில்கள், நவீன பெட்டிகள் தயாரிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். சர்வதேச தரத்தில் ‘தேஜஸ்’ என்ற பெயரில் புதிய வகையான சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய ரயிலின் பெட்டிகள் தங்க நிறத்தில் இருக்கும். இருக்கைகள் நீல வானம் மற்றும் பூமியின் நிறத்தில் அமைக்கப்படும். பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப்பதற்காக எல்இடி பதாகைகளும் பொருத்தப்படும். பயோ கழிப்பறைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் அளவை தெரிந்துகொள்வதற்கான கருவி, தொடுதிறன் கொண்ட தண்ணீர் குழாய்கள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்களுக் காக ஒவ்வொரு இருக்கையிலும் பொழுதுபோக்கு திரைகள், பார் வையற்றோருக்கான ஒருங் கிணைந்த பிரெய்லி திரைகள், வை-ஃபை வசதி, ரயில் சென் றடைந்த ரயில் நிலையத்தின் தகவலை அறிவிக்கும் டிஜிட்டல் பதாகைகள், தேநீர், காபி பானங் களுக்கான தானியங்கி இயந்திரங் கள், கண்காணிப்பு கேமராக்கள், புகை பிடிப்பதை கண்டறியும் கருவி உட்பட 22 வகையான புதிய வசதிகள் இடம் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் கூறியதாவது:

‘தேஜஸ்’ ரயிலுக்கான அதிநவீன சொகுசு பெட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆர்சிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய வகையான ரயில் பெட்டியின் நவீன வடிவமைப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே வாரியம் சென்னை ஐசிஎப்-க்கும் அனுப்பியுள்ளது. புதிய வடிவமைப்பு குறித்து இங்குள்ள வடிவமைப்பு பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இதேபோல், உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடந்து வருகிறது. எனவே, ‘தேஜஸ்’ சொகுசு ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x