

நீர்வழித்தடங்களின் அருகில் மற்றும் சாலையோரங்களில் வசிப் போருக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சிறப்பு ஒதுக் கீடு வழங்கும் திட்டம் மதுரை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச் சிக் குழுமத்தின் மாஸ்டர் பிளான் தொடர்பான விதிகளில் நீர்வழித் தடங்கள் அருகில் குடிசைகளிலும் சாலையோரங்களிலும் வசிப் போருக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப் படையில் அடுக்குமாடி குடியிருப்பு கள் அளிப்பதும் இடம் பெற்றுள் ளது. இதன் அடிப்படையில்தான் கடந்த ஆண்டு சென்னை அடையாறு மற்றும் கூவத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, கரையோரத்தில் வசித்த மக்க ளுக்கு மாற்று இடம் வழங்கப் பட்டது. குறிப்பாக, அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசித்தவர் களுக்கு பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடி யிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதி எண் 7-ஐ பின் பற்றி, நகர திட்ட இயக்ககத்தின்கீழ் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளூர் திட்டக் குழுமங்கள், புதிய நகர வளர்ச்சிக் குழுமங்களுக்கும் 7-ஏ என்ற புதிய விதியை உரு வாக்கி, சிறப்பு ஒதுக்கீடு வழங்கு வது தொடர்பாக பரிசீலிக்குமாறு அரசுக்கு, நகர திட்ட இயக்குநர் பரிந்துரைத்தார்.
இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தற்போது உள்ளூர் திட்ட பகுதிகளான ஈரோடு, வேலூர், திருவள்ளூர், கோவை, மதுரை, கும்மிடிப்பூண்டி, காஞ்சி புரம், சேலம், செங்கல்பட்டு, திருப்பூர், திருச்சி மற்றும் மாமல்ல புரம் ஆகிய பகுதிகளிலும் இந்த விதிகளை அமல்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதற்கான கட்டுப் பாட்டு விதிமுறைகளையும் வகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்தமுறை வடகிழக்கு பருவ மழையின்போது, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இவை தவிர, மற்ற பகுதிகளில் சாலையோரங்களில் வசிப்போர், நீர்நிலைகளின் அருகில் குடிசை களில் வசிப்போருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கிடைக்க இந்த விதிகள் வழிவகை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளூர் திட்ட பகுதிகளான கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், திருப்பூர், ஈரோடு, தூத் துக்குடி, மாமல்லபுரம், திரு வள்ளூர், கும்மிடிப்பூண்டி, காஞ்சி புரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் சிறப்புக் கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், குழு மேம்பாடு மற்றும் வீட்டுமனைகள் போன்றவற்றுக்கான மேம்பாட்டு கட்டுப்பாடு விதிமுறைகள் கடந்த 2010-ம் ஆண்டு வகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.