காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரத்தில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரத்தில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

காஞ்சிபுரம் | விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம்: 100-வது நாளை எட்டியது

Published on

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் நடத்தி வரும் இரவு நேர போராட்டம் நேற்று முன்தினம் இரவு 100-வது நாளை எட்டியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமான நிலையம் அமைவதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் என்று கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏகனாபுரத்தில் தொடர்ந்து நடந்து வரும் இந்த இரவு நேரப் போராட்டம் நேற்று முன்தினம் 100-வது நாளை எட்டியது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் ஒன்று கூடி மெழுகுவர்த்தியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in