Published : 28 Nov 2016 09:40 AM
Last Updated : 28 Nov 2016 09:40 AM

பிரதமர் அறிவிப்பு ஏழைகளுக்குத்தான் பாதிப்பு: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து

ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் கறுப்புப் பணத்துக்கு சம்பந்தமில்லாத ஏழை, எளிய மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொரு ளாளர்ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ப தில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை ஒழிப்பதில் ஏற்படக்கூடிய சங்கடங்கள், சிரமங்களை அனைவரும் சிந்திக்க வேண்டும். இன்றைக்கு மக்கள் வங்கி கள் முன்பு நீண்ட வரிசையில் நிற்கின்றனர். உழைத்து சம்பாதித்த சொந்த பணத்தை எடுக்க இப்படிப்பட்ட அக்கிரமங்களை, கொடுமை களை, சோதனைகளை சந்திக்கிற நிலையை எண்ணும்போது வேதனை ஏற்படுகிறது.

மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றாக இணைந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக நவம்பர் 28-ம் தேதி (இன்று) போராட்டம் நடத்தவுள்ளன. இந்த அசாதாரண சூழலில், தமிழகத்தில் ஒரு அரசு உள்ளதா என்ற கேள்வியே எழுகிறது. பொதுமக்களின் பிரச்சினைகளை பற்றி அரசு கவலைப்படவில்லை. ஏனென்றால். அரசு முடங்கி இருக்கிறது. இந்த நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x