

மயிலாடுதுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் வடக்கு பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை தொடரும் என வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கனமழை காரணமாக மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.