

டிசம்பர் மாதம் வரை விடுமுறை நாட்களில் வங்கிகள் செயல்படும் என வெளியான தகவல் சரியல்ல என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக சில தொலைக்காட்சிகள், இணைய தளங்களில் நேற்று செய்தி வெளியானது.
இத்தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்தபடி, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்த வார சனி, ஞாயிறு, அதாவது 12, 13 (நேற்று, இன்று) ஆகிய 2 நாட்கள் மட்டுமே அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மற்றபடி, டிசம்பர் மாதம் வரை விடுமுறை நாட்களிலும் வங்கிகள் இயங்கும் என வெளியான செய்தி தவறானது என்றனர்.