சென்னை - அண்ணா நகரில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பொழிவு

தண்டையார் பேட்டை பகுதியில் தேங்கி உள்ள தண்ணீர்.
தண்டையார் பேட்டை பகுதியில் தேங்கி உள்ள தண்ணீர்.
Updated on
1 min read

சென்னை: சென்னை - அண்ணா நகரில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, 10 நிமிடத்தில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக வட சென்னையில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், இன்று (நவ.3) முதல் சென்னையில் மழைப் பொழிவு சற்றே குறைந்தது. இதன் காரணமாக சென்னையில் தேங்கிய இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணி முதல் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, 5 மணி முதல் 7 மணி வரை கனமழை பெய்தது. இதன்படி, அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, அங்கு 10 நிமிடத்தில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in