புதுச்சேரி, காரைக்காலில் இரு தினங்களுக்கு பள்ளிகளுக்கு மழை விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் இரு தினங்களுக்கு பள்ளிகளுக்கு மழை விடுமுறை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் தொடரும் கனமழையால் நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பொழிந்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், விடாமல் மழை பொழிவு இருப்பதால் இன்று புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை கூறுகையில், "தொடர்ந்து கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி, காரைக்காலுக்கு நாளை (நவ. 4), நாளை மறுநாள் (நவ. 5) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in