கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருச்சியில் 3 வீடுகளில் போலீஸார் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருச்சியில் 3 வீடுகளில் போலீஸார் சோதனை
Updated on
1 min read

திருச்சி: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் 3 பேரின் வீடுகளில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலீப் (30) என்பவர் வீட்டில், கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமசந்திரா நகரைச் சேர்ந்த சுபைர் அகமது (28) வீட்டில் கன்டோன்மென்ட் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸாரும், திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை மேலூர் அஞ்சலம் கிராமத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் முகமது ஹக்கீம் வீட்டில் தா.பேட்டை போலீஸாரும் நேற்று சோதனை நடத்தினர். இவ்விரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவொரு ஆவணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. இத்தகவலை போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in